பயண ஆலோசனையை இரத்து செய்தது நோர்வே அரசாங்கம் !
14 view
இலங்கையின் பாதுகாப்பு நிலைமை தற்போது மிகவும் ஸ்திரமாக உள்ளதாக சுட்டிக்காட்டி முன்பு விதித்திருந்த பயண ஆலோசனையை நோர்வே அரசாங்கம் இரத்து செய்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள், ஊரடங்கு உத்தரவு மற்றும் அவசரகால நிலை பிரகடனத்தை அடுத்து மே மாதம் பயண ஆலோசனை நோர்வே புதுப்பித்தது. இந்நிலையில் இலங்கைக்கான பயண ஆலோசனையை இரத்து செய்துள்ள நோர்வே, பாதுகாப்பு நிலைமை ஓரளவு மேம்பட்டிருந்தாலும் எரிபொருள், மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக கூறியுள்ளது. ஆகவே இலங்கைக்கு பயணிக்கத் திட்டமிடும் தமது நாட்டவர்களை தேவையான மருந்துகளை எடுத்துச் செல்லவும், போக்குவரத்து தொடர்பாக உறுதி செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
The post பயண ஆலோசனையை இரத்து செய்தது நோர்வே அரசாங்கம் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பயண ஆலோசனையை இரத்து செய்தது நோர்வே அரசாங்கம் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
