நல்லூரானை தரிசிக்க வருகை தரும் அடியவர்களுக்கு மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் வேண்டுகோள்!
6 view
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த் திருவிழாவில் பங்கேற்கும் அடியவர்கள், தங்க நகைகள் மற்றும் பணத்தை எடுத்துச் செல்வதைத் தவிர்க்குமாறு வடக்கு மாகாணத்துக்கு பொறுப்பான மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த விஜயசூர்ய வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘கடந்த வருடம் கொவிட்-19 நோய்த்தொற்று பரவல் காரணமாக நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா கட்டுப்பாடுகளுடன் இடம்பெற்றது. எனினும் இம்முறை வழமை போன்று லட்சக்கணக்கான அடியவர்கள் பங்கேற்பர். வெளிநாடுகளிலிருந்தும் பல ஆயிரக்கணக்கானோர் நல்லூரானை தரிசிக்க வருகை தந்துள்ளனர். அதனால் திருடர்களின் கைவரிசை அதிமாக இருக்கும். அத்துடன், வீட்டில் ஒருவராவது தங்கியிருப்பதுடன் அல்லது பாதுகாப்பாக வீட்டை மூடி ஆலயத்துக்குச் செல்லவேண்டும். வழமைபோன்று சீருடை மற்றும் சிவில் உடையில் பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். எனினும், திருடர்கள் மற்றும் கொள்ளையர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்பட்டு அடியவர்கள் ஒத்துழைக்க வேண்டும். ஆலயத்துக்கு வருகை தரும் அடியவர்கள் தமது…
The post நல்லூரானை தரிசிக்க வருகை தரும் அடியவர்களுக்கு மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் வேண்டுகோள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நல்லூரானை தரிசிக்க வருகை தரும் அடியவர்களுக்கு மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் வேண்டுகோள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
