3000 குடும்பங்களை மன்னாரில் கடனாளிகளாக மாற்றியுள்ள தேசிய வீடமைப்பு அதிகாரசபை!
34 view
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் கடந்த 2018, 2019 ஆம் ஆண்டு “செமட்ட செவன” மாதிரி செயற்திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தின் ஊடாக மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 3022 குடும்பங்களில் சில குடும்பங்கள் பகுதியளவிலும் பல குடும்பங்கள் முழுமையாகவும் கடனாளியாகியுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் உள்ள மிகவும் பின் தங்கிய குடும்பங்களை முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்து நேரடி களவியத்தின் ஊடாக 2018,2019 ஆண்டு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினர் மற்றும் பிரதேச செயலகங்கள் இணைந்து வீட்டு திட்ட பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு ஐந்து லட்சம் மற்றும் ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான வீட்டுத்திட்டத்திற்கான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர். அதன் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் தாங்கள் தற்காலிகமாக வசித்து வந்த குடிசை வீடுகளையும் உடைத்து கல் வீடும் கட்டும் கனவில் அவசர அவசரமாக அடிக்கள் நாட்டும் பணிகளை முன்னெடுத்திருந்தனர். தேசிய வீடமைப்பு அதிகார சபையின் நிபந்தனையின் அடிப்படையில் வீடுகளின் நிர்மாணத்திற்கு…
The post 3000 குடும்பங்களை மன்னாரில் கடனாளிகளாக மாற்றியுள்ள தேசிய வீடமைப்பு அதிகாரசபை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 3000 குடும்பங்களை மன்னாரில் கடனாளிகளாக மாற்றியுள்ள தேசிய வீடமைப்பு அதிகாரசபை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
