நிலக்கரி தொடர்பில் ரஷ்ய நிறுவனத்திற்கு கேள்விப்பத்திரத்தை வழங்க பரிந்துரை
14 view
2025 ஆம் ஆண்டு வரை நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் நிலையத்திற்கு 4.5 மெட்ரிக் தொன் நிலக்கரியை வழங்குவதற்கான ஏலங்களை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப மதிப்பீட்டுக்குழு, ரஷ்ய நிறுவனத்திற்கு கேள்விப்பத்திரத்தை வழங்க பரிந்துரை செய்துள்ளது. இதன்படி 900 மில்லியன் அமெரிக்க டொலர் ஒப்பந்தத்தின் அடிப்படையில், நிறுவனம் 2025 வரை மின்சார உற்பத்தி நிலையத்திற்கு நிலக்கரியை வழங்கும். குறித்த ரஷ்ய நிறுவனம், ஒரு மெட்ரிக் தொன் ஒன்று 328.22 டொலர் என்ற அளவில் நிலக்கரியை ஆறு மாதக்கடன் வசதியில் வழங்க முன்வந்துள்ளது. ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட கேள்விப்பத்திர பரிந்துரைக்குழு அதன் பரிந்துரையை அடுத்த வாரம் நிதி அமைச்சகத்திடம் அதன் அவதானிப்புகளுக்காக சமர்ப்பிக்கவுள்ளது. இதனையடுத்து கொள்முதல் குழுவின் ஒப்புதலுக்காக ஆகஸ்ட் 29 ஆம் திகதி அமைச்சரவைக்கு அது அனுப்பப்படவுள்ளது. இந்தநிலையில் ரஷ்ய நிறுவனத்தின் இந்த ஆறு மாத கடன் வசதியை ஒரு பெரிய நிவாரணமாக அமைந்துள்ளது. இல்லையெனில், அடுத்த ஜனவரி மாதம் முதல்…
The post நிலக்கரி தொடர்பில் ரஷ்ய நிறுவனத்திற்கு கேள்விப்பத்திரத்தை வழங்க பரிந்துரை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நிலக்கரி தொடர்பில் ரஷ்ய நிறுவனத்திற்கு கேள்விப்பத்திரத்தை வழங்க பரிந்துரை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
