வானிலை தொடர்பில் வௌியிடப்பட்ட அறிக்கை
20 view
கொழும்பு, ஓக 22 நாட்டின் தென் மேற்கு பகுதியில் (மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்) மழை நிலைமை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
The post வானிலை தொடர்பில் வௌியிடப்பட்ட அறிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வானிலை தொடர்பில் வௌியிடப்பட்ட அறிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
