உலக வங்கியின் கடுமையான விதிமுறைகளுடன் உர இறக்குமதி
14 view
மோசடி மற்றும் ஊழலற்ற செயல்முறையை உறுதி செய்வதற்காக உலக வங்கியால் விதிக்கப்பட்ட கடுமையான விதிமுறைகளுடன் உர இறக்குமதிக்கான சர்வதேச போட்டி ஏலங்களை இலங்கை திறந்துள்ளதாக விவசாய அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். உலக வங்கியின் இந்த வழிகாட்டுதல்களின் படி, ஒப்பந்ததாரர்கள் மற்றும் துணை ஒப்பந்ததாரர்கள் உலக வங்கி குழுவிற்கு கொள்முதல் செயல்முறை தொடர்பான பதிவுகள், கணக்குகள் மற்றும் பிற ஆவணங்களை ஆய்வு செய்வதற்கும், உலக வங்கியால் நியமிக்கப்பட்ட கணக்காய்வாளர்களால், கணக்காய்வு செய்வதற்கும் அனுமதிக்க வேண்டும். உலக வங்கி வழங்கும் 350 மில்லியன் அமெரிக்க டொலர் அவசரகால நிதி வசதியின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி, வரவிருக்கும் பெரும் போகத்துக்கு 125,000 மெட்ரிக் தொன் யூரியாவைக் கொள்முதல் செய்வதற்கான கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டுள்ளன. அதன்படி, மொத்த உலக வங்கியின் நிதியுதவியுடன் கூடிய அவசரகால நெருக்கடி நிலை பணித் திட்டத்தில் இருந்து 110 மில்லியன் அமெரிக்க டொலர்கள், பெறுமதியான யூரியா, பெரும் போகத்துக்கு முன்னதாக விநியோகிக்கப்படும்.…
The post உலக வங்கியின் கடுமையான விதிமுறைகளுடன் உர இறக்குமதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உலக வங்கியின் கடுமையான விதிமுறைகளுடன் உர இறக்குமதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
