இலங்கையின் கடனில் பாதி சீனாவிடமிருந்து: IMF உடன்படிக்கையை பெய்ஜிங்கின் நிலைப்பாடே தீர்மானிக்கும்!
7 view
இலங்கையின் வெளிநாட்டு கடனில், பாதியளவான கடன் சீனாவிடமிருந்தே பெறப்பட்டுள்ளதாக இலங்கை நிதி அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ, கடன் விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்திற்கு சீனாவின் நிலைப்பாடு முக்கியமானதாக அமைந்துள்ளது. எனவே, கடன் மறுசீரமைப்பு தொடர்பான சீனாவின் நிலைப்பாடு, சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) பணியாளர் ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். 2022, ஆகஸ்ட்டில், நிதி அமைச்சின் கடன் வழங்குநர் பட்டியல் இற்றைப்படுத்தலின்படி, இலங்கையின் மொத்த இரு தரப்புக் கடன் 10 பில்லியன் டொலர்களாகும். இதில் 44 சதவீதமானவை கடந்த ஆண்டு இறுதி வரை சீனாவிடம் இருந்து வாங்கிய தொகைகளாகும். அத்துடன், ஜப்பானிடம் 32 சதவீதமும், இந்தியாவிடம் 10 சதவீதமும் கடன்களாக பெறப்பட்டுள்ளன. தென் கொரியா மூன்று சதவீதத்திலும், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும், ரஷ்யா, ஹங்கேரி, ஸ்வீடன், கனடா, அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தலா இரண்டு சதவீதத்திலும் உள்ளன. மீதமுள்ள ஒரு சதவீத…
The post இலங்கையின் கடனில் பாதி சீனாவிடமிருந்து: IMF உடன்படிக்கையை பெய்ஜிங்கின் நிலைப்பாடே தீர்மானிக்கும்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையின் கடனில் பாதி சீனாவிடமிருந்து: IMF உடன்படிக்கையை பெய்ஜிங்கின் நிலைப்பாடே தீர்மானிக்கும்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
