அறவழி போராட்டகாரர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி மன்னாரில் போராட்டம்!
9 view
பயங்கரவாத தடை சட்டத்தை உடனடியாக இரத்து செய்ய கோரியும் இலங்கையில் இடம் பெற்ற ஜனநாயக போராட்டங்களில் கலந்து கொண்ட போராட்டகாரர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரியும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்திற்கான ஒருங்கமைப்பில் இன்றைய தினம் காலை 10.30 மணியளவில் அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது. குறித்த போராட்டத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட தரப்பு தமிழர் என்ற வகையில் பயங்கரவாத தடைசட்டத்தை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும் எனவும் ஜனநாயக அறவழி போராட்டத்தில் கலந்து கொண்டமைக்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் மாணவ செயற்பாட்டாளர்களையும், இளைஞர்களை உடனடியாக விடுதலை செய்யகோரியும் அவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்ககூடாது எனவும் போராட்டகாரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த போராட்டத்தில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு அங்கத்தவர்கள் வவுனியா, கிளிநொச்சி, முல்லைதீவு, மன்னார் மாவட்டத்தை சேர்ந்த பொது மக்கள்…
The post அறவழி போராட்டகாரர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி மன்னாரில் போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அறவழி போராட்டகாரர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி மன்னாரில் போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
