யாழுக்கு அத்தியாவசிய பொருட்களை எடுத்து வர சரக்கு புகையிரத சேவை!
14 view
யாழ்ப்பாணத்துக்கான அத்தியாவசிய பொருட்களை கொழும்பிலிருந்து எடுத்து வருவதற்காக சரக்கு ரயில் சேவைகளை பயன்படுத்த திட்ட முன்மொழிவுகள் புகையிரத திணைக்களத்தால் முன்னெடுக்கப்படுகிறது. இதனடிப்படையில் இந்த சேவையை ஆரம்பிக்க உத்தேசித்துள்ளோம் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காங்கேசன்துறையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு ” யாழ்.ராணி ” புகையிரதத்தில் பயணித்தார். யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை வந்தடைந்த அமைச்சர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். மேலும் தெரிவிக்கையில், வரலாற்றில் முதல் தடவையாக யாழ் மக்களை கருத்தில் கொண்டு அதிகளவான சேவைகளை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்துள்ளோம். புதிதாக காங்கேசன்துறை – கிளிநொச்சி அறிவியல் நகருக்கு இடையிலான “யாழ் ராணி” சேவை , தடைப்பட்டிருந்த இரவு தபால் சேவை மீள ஆரம்பம், உத்தரதேவி மற்றும் கடுகதி சேவைகளின் தரிப்பிட நிலையங்களை அதிகரித்துள்ளமை உள்ளிட்டவற்றை செயற்படுத்தியுள்ளோம். இவற்றுடன், யாழ்ப்பாணத்துக்கான அத்தியாவசிய பொருட்களை கொழும்பிலிருந்து…
The post யாழுக்கு அத்தியாவசிய பொருட்களை எடுத்து வர சரக்கு புகையிரத சேவை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழுக்கு அத்தியாவசிய பொருட்களை எடுத்து வர சரக்கு புகையிரத சேவை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
