போதைப்பொருள் பாவனைக்கு எதிராக சங்கானையில் கவனயீர்ப்பு!
6 view
போதைப்பொருள் பாவனைக்கு எதிராக இன்று ஞாயிற்றுக்கிழமை சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது. இப்போராட்டத்தில் சங்கானை பிரதேச இளைஞர் சம்மேளனத்தினர், வலி. மேற்கு பிரதேச சபையினர் மற்றும் இளைஞர் யுவதிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர். இதன்போது போதைப்பொருள் பாவனையை ஒழிக்குமாறும் பன்னாட்டு புகையிலை நிறுவனத்தின் வரி மோசடிக்கு உடந்தையாக இருந்தவர்களை அம்பலப்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் யாழில் தடை செய்யப்பட்ட போதை ஊசி மருந்து பாவனைக்கு எதிராக அரசே நடவடிக்கை எடு, மது நிறுவனங்களுக்கு இளைஞர்களின் எதிர்காலத்தை விற்காதே போன்ற வாசகங்கள் உள்ளடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.
The post போதைப்பொருள் பாவனைக்கு எதிராக சங்கானையில் கவனயீர்ப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போதைப்பொருள் பாவனைக்கு எதிராக சங்கானையில் கவனயீர்ப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
