ரணில்:- பலமடைகிறாரா? பலவீனமடைகிறாரா? நிலாந்தன்.
14 view
நாட்டுக்கு இப்பொழுது தேவையாக இருப்பது ஒரு தேசிய அரசாங்கம்தான். பொருளாதார நெருக்கடி போன்ற நிலைமைகளின்போது உலகின் உயர்ந்த ஜனநாயகங்கள் அவ்வாறான தேசிய அரசாங்கங்களைத்தான் உருவாக்கின.ஆனால் இலங்கைத்தீவின் ஜனநாயகம் அத்துணை செழிப்பானது அல்ல. இலங்கைத்தீவில் தேசிய அரசாங்கம் அல்லது அதைவிட குறைவாக சர்வ கட்சி அரசாங்கம் போன்ற உரையாடல்கள் எப்பொழுது தொடங்குகின்றன என்றால், அரசாங்கம் தன் தோல்வியை ஏனைய கட்சிகளின் தலையில் சுமத்திவிட எத்தனிக்கும் பொழுதுதான்.அதாவது தோல்விக்கு எதிர்க்கட்சிகளை பங்காளிகளாக்கும் ஒரு தந்திரமாகத்தான் சர்வ கட்சி அரசாங்கங்கள் உருவாக்கப்படுகின்றன. குறிப்பாக தேசிய அரசாங்கம் என்பது தமிழ் நோக்கு நிலையில் சிங்கள பௌத்த தேசிய அரசாங்கமாக அமைய முடியாது. அது சிங்கள தமிழ் முஸ்லிம் ஆகிய மூவினத்தவரையும் பிரதிபலிக்கும் ஒரு பல் தேசிய அரசாங்கமாக அமைய வேண்டும். ஆனால் இலங்கைத் தீவு அதற்குரிய ஜனநாயகச் செழிப்பைக் கொண்டிருக்கவில்லை. பொருளாதார நெருக்கடி மோசமான வளர்ச்சியை அடைந்த பொழுது கோத்தா ஒரு தேசிய அரசாங்கத்தை உருவாக்கத் தயங்கினார்.…
The post ரணில்:- பலமடைகிறாரா? பலவீனமடைகிறாரா? நிலாந்தன். appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணில்:- பலமடைகிறாரா? பலவீனமடைகிறாரா? நிலாந்தன். appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
