மேற்கிந்திய தீவுகளுக்கு இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து பதிலடி!
42 view
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணி டக்வத் லுயிஸ் முறைப்படி 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, 1-1 என்ற கணக்கில் நியூஸிலாந்து சமநிலைப்படுத்தியது. பார்படோஸில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, 48.2 ஓவர்கள் நிறைவில், 212 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பின் அலென் 96 ஓட்டங்களையும் டேரில் மிட்செல் 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், கெவீன் சின்கிளாயர் 4 விக்கெட்டுகளையும் ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும் அகீல் ஹொசைன் 2 விக்கெட்டுகளையும் அல்சார்ரி ஜோசப் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர். இதனைத்தொடர்ந்து, மேற்கிந்திய தீவுகள் அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாடவிருந்த போது, மழைக் குறுக்கிட்டதால், அந்த அணிக்கு போட்டி 41…
The post மேற்கிந்திய தீவுகளுக்கு இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து பதிலடி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மேற்கிந்திய தீவுகளுக்கு இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து பதிலடி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
