அமைச்சுப் பதவிகளை கோரிய ஆளும்கட்சி: ரணில் மறுப்பு
6 view
கொழும்பு, ஓக 20 சர்வகட்சி அரசாங்கத்தில் பொதுஜன பெரமுனவுக்கு மேலும் அமைச்சுப் பதவிகளை வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மறுத்துவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. அங்கு கூடுதலான அமைச்சரவை அமைச்சர் பதவிகள் மற்றும் இராஜாங்க அமைச்சர் பதவிகள் வழங்க வேண்டும் என கோரப்பட்டது. இதன்போது சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட வேண்டிய பதினாறு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சமர்ப்பித்துள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள நாமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க வேண்டாம் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர். எவ்வாறாயினும், அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதியுடன்…
The post அமைச்சுப் பதவிகளை கோரிய ஆளும்கட்சி: ரணில் மறுப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அமைச்சுப் பதவிகளை கோரிய ஆளும்கட்சி: ரணில் மறுப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
