சவேந்திரசில்வா உட்பட்ட யுத்த குற்றவாளிகளை தடைசெய்ய வேல்ஸ் அரசிடமும் கோரிக்கை!
39 view
இலங்கையில் இடம்பெற்ற தமிழ்மக்களுக்கு எதிரான இனப்படுகொலை மற்றும் யுத்த குற்றங்களுக்காகவும், தற்போதும் இலங்கையில் தொடரும் ஆட்கடத்தல் மற்றும் சித்திரவதைக்கு பொறுப்பு கூறவேண்டிவர் என்ற அடிப்படையிலும், இலங்கை இராணுவ தளபதியான சவேந்திர சில்வா உட்பட்ட இனம்காணப்பட்ட யுத்த குற்றவாளிகளை, பிரித்தானிய அரசு தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு வேல்ஸ் அரசாங்கம் (Government of Wales) மற்றும் வேல்ஸ் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை திரட்டும் நோக்கில் முக்கிய இராஜதந்திர சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. வேல்ஸ் பகுதியிலுள்ள சினோன் வல்லி (Cynon Valley) என்ற பகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய பெத் வின்ரர் (Hon Beth Winter MP) அவர்களுடன் இந்த சந்திப்பு புதன்கிழமை (17.08.2022) மாலை 4:30 மணியளவில் சூம் வழியாக இடம்பெற்றுள்ளது. இலங்கையில் யுத்தத்தினாலும் சித்திரவதையாலும் பாதிக்கப்பட்டு, உயிர் பாதுகாப்புக்காக நாட்டைவிட்டு வெளியேறி பிரித்தானியாவில் அடைக்கலம் கேட்க நிர்பந்திக்கப்பட்டிருக்கும் தமிழர்களில் வேல்ஸ், சினோன் வல்லி பகுதியில் வாழ்பவர்கள் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த…
The post சவேந்திரசில்வா உட்பட்ட யுத்த குற்றவாளிகளை தடைசெய்ய வேல்ஸ் அரசிடமும் கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சவேந்திரசில்வா உட்பட்ட யுத்த குற்றவாளிகளை தடைசெய்ய வேல்ஸ் அரசிடமும் கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
