கிளிநொச்சி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம்: யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விசேட அறிக்கை!
41 view
யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாக தொழில்நுட்ப பீடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பான தெளிவுபடுத்தல் தொடர்பில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மேற்படி இன்று 18.08.2022 யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாக தொழில்நுட்ப பீடத்தின் கட்டடத்திறப்பு விழாவிற்கு வருகை தந்திருந்த குழுவினருக்கு எதிராக அங்கு கல்வி கற்கும் குறிப்பிட்ட ஒரு சில மாணவர்களினால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இவ் ஆர்ப்பாட்டம் தொடர்பாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கும் தொழில்நுட்ப பீட மாணவர் ஒன்றியத்திற்கும் எந்தவித தகவல்களும் அவ் மாணவர்களினால் தெரியப்படுத்தாத நிலையிலே இவ் ஆர்ப்பாட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சிலரது அரசியல் சுயலாபத்திற்காக முன்னெடுக்கப்பட்ட ஒரு ஆர்ப்பாட்டமாகவே இது காணப்படுகின்றது. நடந்த இப் போராட்டத்திற்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதனை இங்கே உறுதியாகக் கூறிக்கொள்ளுகின்றோம். மேலும் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்ட மாணவர்களினால் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. அவர்கள் முன்வைத்த கோரிக்கையானது மாணவர் ஒன்றியத்தின் கவனத்திற்கு கொண்டு…
The post கிளிநொச்சி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம்: யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விசேட அறிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிளிநொச்சி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம்: யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விசேட அறிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
