கிளிநொச்சியில் சங்கமித்த கோட்டா கோ கம ஆர்ப்பாட்டகாரர்கள்!(படங்கள் இணைப்பு)
36 view
வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துவரும் போராட்டத்தின் 2000நாளை முன்னிட்டு இன்றையதினம் கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி ஒன்றினை நடாத்தியிருந்தனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற இன்றைய ஆர்ப்பாட்டத்தில் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் சமயத் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். அதேவேளை கொழும்பு காலிமுகத்திடலில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை பதவி விலகுமாறு வலியுறுத்தி நடைபெற்றுவந்த கோட்டா கோ கம ஆர்ப்பாட்டத்தின் செயற்பாட்டாளர்கள் ஜோசெப் ஸ்டாலின் மற்றும் சந்தியா எக்லினாகொடா ஆகியோர் உட்பட காலிமுகத்திடலில் இருந்து 28 பேர் இன்றைய கவனயீர்ப்பு போராட்டத்தில் நேரடியாக பங்கெடுத்து தமது ஆதரவை தெரிவித்தனர். இதேவேளை கோட்டா கோ கம ஆர்ப்பாட்ட களத்திலிருந்து வருகை தந்தவர்களில் ஒருவரான ராஜ்குமார் ரஜீவ்காந் குறித்த போராட்டம் தொடர்பில் தெரிவிக்கையில், காணாமல் போனவர்களின் உறவினர்கள் நடத்தும் நீதிக்கான போராட்டம் 2000ஆவது நாட்களைத் தொட்டு தொடர்ந்து செல்கிறது. மிகவும் சிக்கலான ஒரு பிரச்சினை…
The post கிளிநொச்சியில் சங்கமித்த கோட்டா கோ கம ஆர்ப்பாட்டகாரர்கள்!(படங்கள் இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிளிநொச்சியில் சங்கமித்த கோட்டா கோ கம ஆர்ப்பாட்டகாரர்கள்!(படங்கள் இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
