நாட்டில் நாளுக்கு நாள் தீவிரமடையும் கொரோனா:இன்றும் உயிரிழப்புக்கள் பதிவு!
15 view
நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மேலும் 9 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 3 ஆண்களும் 1 பெண்ணும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, 60 வயதுக்கு மேற்பட்ட 3 ஆண்களும் 2 பெண்களும் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி நேற்றைய தினத்தில் 6 ஆண்களும் 3 பெண்களும் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் மேலும் 162 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். பிற செய்திகள்
The post நாட்டில் நாளுக்கு நாள் தீவிரமடையும் கொரோனா:இன்றும் உயிரிழப்புக்கள் பதிவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டில் நாளுக்கு நாள் தீவிரமடையும் கொரோனா:இன்றும் உயிரிழப்புக்கள் பதிவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
