கள்ளக்குறிச்சி மாணவி சாவு: நீதிகோரி கலவரம் வெடித்தது
20 view
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் மேல்நிலைப் பள்ளியில் கல்வி கற்றுவந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சின்னசேலம் அருகேயுள்ள மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்றுவந்த குறித்த மாணவி கடந்த ஐந்து நாள்களுக்கு முன்னர் பாடசாலை விடுதியின் மூன்றாம் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார் என பாடசாலை நிர்வாகத்தால் பெற்றோருக்குத் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த பெற்றோர் பதறியடித்து பாடசாலைக்கு விரைந்த நிலையில் தமது மகளின் இறப்பில் மர்மம் உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தவேண்டும் என சின்னச்சேலம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். அதனைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பாடசாலையை முற்றுகையிட்டு மாணவியின் உடலை வாங்க மறுத்து 5 நாள்களாகப் போராட்டம் செய்து வந்தனர். இந்த நிலையில் மாணவி ஸ்ரீமதியின் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கை நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மாணவி உயிரிழக்கும் முன்னே உடலில் காயங்கள் இருந்தன என்றும் அவரது கை,கால்கள் உடைந்திருந்தன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆவேசமடைந்த…
The post கள்ளக்குறிச்சி மாணவி சாவு: நீதிகோரி கலவரம் வெடித்தது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கள்ளக்குறிச்சி மாணவி சாவு: நீதிகோரி கலவரம் வெடித்தது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
