ஹட்டனில் தனியார் பஸ் உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
6 view
ஹட்டன், ஜுலை 8 இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஹட்டன் டிப்போவினால் ஹட்டனில் உள்ள தனியார் பஸ்களுக்கு கடந்த காலங்களில் டீசல் வழங்கப்பட்டு வந்தது. எனினும், கடந்த 7 நாட்களாக ஹட்டன் டிப்போவினால் தனியார் பஸ்களுக்கு டீசல் எரிபொருளை வழங்கவில்லை. இதனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹட்டன் பஸ் நிலையத்தில் இருந்து சேவையில் இயங்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களை மறித்து தனியார் பஸ் உரிமையாளர்கள் (08) இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹட்டன் பஸ் நிலையத்திலிருந்து தினசரி நீண்ட மற்றும் குறுகிய தூர பிரதேசங்களுக்கு செல்லும் தனியார் பஸ்களின் சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் பஸ் உரிமையாளர்கள் (08) காலை ஹட்டன் பஸ் நிலையத்தில் இவ்வாறு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். நேற்றைய தினம் சில தனியார் பஸ்களுக்கு டீசல் வழங்கப்பட்டதாகவும், ஏனையவர்களுக்கு இன்று டீசல் வழங்கப்படும் என தெரிவித்து டோக்கன் வழங்கப்பட்டதாகவும் தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவித்தனர். எனினும், இன்றைய தினம் டோக்கன்…
The post ஹட்டனில் தனியார் பஸ் உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஹட்டனில் தனியார் பஸ் உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
