அனுரகுமார – அமெரிக்க தூதர் சந்திப்பு
31 view
கொழும்பு, ஜுலை 08 ஜே.வி.பி ஒரு பாரிய பிரசன்னத்தைக் கொண்ட பிரபலமான ஒரு கட்சியாகும் என்று அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் கூறியுள்ளார். ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு ஒன்றின்போது அவர் இதனை நேற்று தெரிவித்துள்ளார். தாம் அண்மையில் ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்தமை தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் இந்த சந்திப்பை அடுத்து ஜேவிபியுடன் நல்ல புரிதல் உள்ளது என்றும் ஜே.வி.பி பொருத்தமான அரசியல் கட்சி என்றும் ஜூலி சுங் தெரிவித்தார். அமெரிக்கக் கொள்கைகள், முதலீட்டுத் திட்டங்கள் அல்லது வேறு ஏதேனும் உதவிகள் குறித்து சந்தேகம் இருக்கும்போதெல்லாம் தம்மை தொடர்புகொள்ளுமாறு தாம், ஜே வி பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவிடம் கேட்டுக் கொண்டதாக அமெரிக்க தூதர் கூறினார். தாம் இலங்கைக்கு வந்த பின்னர், அனைத்து அரசியல் கட்சிகள் சிவில் சமூகங்கள் மாணவர்கள் குழுக்கள் மற்றும் மதக் குழுக்களைச் சந்திப்பதை உறுதிசெய்யுமாறு தமது பணியாளர்களிடம் கேட்டுக்கொண்டதாக அமெரிக்க தூதர் தெரிவித்தார். எந்த…
The post அனுரகுமார – அமெரிக்க தூதர் சந்திப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அனுரகுமார – அமெரிக்க தூதர் சந்திப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
