யாழில் துவிச்சக்கரவண்டியுடன் பெற்றோல் திருட்டு
15 view
யாழ், ஜுலை 07 யாழில் வீடு புகுந்த திருட்டுக்கும்பல் ஒன்று பெட்ரோல் மற்றும் துவிச்சக்கர வண்டி என்பவற்றை திருடி சென்றுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு – புதிய செம்மணி வீதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் புதன்கிழமை அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த வீட்டார் வீட்டில் இருந்த துவிச்சக்கர வண்டியை காணவில்லை என தேடிய போதே , மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோல் திருடப்பட்டு உள்ளமையையும் கண்டறிந்தனர். அதனை அடுத்து வீட்டில் பொருத்தியிருந்த பாதுகாப்பு கமராவில் பரிசோதித்த போது , வீட்டினுள் நுழைந்த திருடன் துவிச்சக்கர வண்டியையும் , மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலையும் திருடிக்கொண்டு செல்வதனை அவதானித்துள்ளனர்.
The post யாழில் துவிச்சக்கரவண்டியுடன் பெற்றோல் திருட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் துவிச்சக்கரவண்டியுடன் பெற்றோல் திருட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
