பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை மாபெரும் நடைபவனி! தமிழ் மக்களுக்கு அழைப்பு
5 view
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான நடைபவனியை ஆரம்பிக்கவுள்ளதாகவும் இந்த நடைபவனியில் அனைத்து தமிழ் உறவுகளையும் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் அம்பாறை மாவட்ட தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார் இன்று மட்டக்களப்பில் உள்ள மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த அவர், இன்று மூன்றாவது நாளாகவும் முள்ளிவாய்க்கால் கஞ்சிவாரப் பிரகடனம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் முள்ளிவாய்க்காலில் இன்னுயிர்களை ஈத்த உறவுகளுக்கான கஞ்சிவாரம் இன்று மூன்றாவது நாளாகவும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. 12ஆம் திகதி தொடங்கிய இந்த கஞ்சிவாரம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் முன்றலில் நிறைவடையவுள்ளது. நாளை நடைபெறவுள்ள பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான நடைபவனிக்கு எட்டு மாவட்டத்தைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுடன் பாதிரியார்கள்,அரச சார்பற்ற நிறுவனங்கள், அரசியல்வாதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மீனவ சங்கங்கள்,…
The post பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை மாபெரும் நடைபவனி! தமிழ் மக்களுக்கு அழைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை மாபெரும் நடைபவனி! தமிழ் மக்களுக்கு அழைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
