கடுமையாக்கப்பட்ட எம்.பி.க்களின் பாதுகாப்பு: ஒருவருக்கு 6 பொலிஸ் அதிகாரிகள் இணைப்பு

5 view
கொழும்பு,மே 14 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக மேலதிக பொலிஸாரை நியமிக்குமாறு அமைச்சர் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளரிடம் பொலிஸ் தலைமையகம் பணிப்புரை விடுத்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மேலதிகமாக 04 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் அதிகபட்சமாக 6 பொலிஸ் அதிகாரிகள் இணைக்கப்பட்டுள்ளனர். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக தலா இரண்டு T-56 ரக துப்பாக்கிகளை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு வழங்குமாறும் பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மையின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
The post கடுமையாக்கப்பட்ட எம்.பி.க்களின் பாதுகாப்பு: ஒருவருக்கு 6 பொலிஸ் அதிகாரிகள் இணைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース