மனித கடத்தலுக்கு உள்ளான இலங்கையர்கள்!

14 view
கடல் மார்க்கமாக தமிழ்நாட்டிற்கும் பின்னர் மங்களூருவிற்கும் அழைத்துச்செல்லப்பட்ட 38 இலங்கையர்களை சட்டவிரோதமாக கனடாவிற்கு அனுப்புவதற்கான மனித கடத்தல் முயற்சி தொடர்பில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் தாக்கல் செய்த முன்பிணை மனுவை இந்தியாவின் தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்பதாவது சந்தேக நபரான, தமிழ்நாடு- ராமநாதபுரத்தை சேர்ந்த சீனி அபுல்கான், கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தலைமறைவாகியுள்ளார். இந்தநிலையில் அபுல்கான், தமக்கு நிவாரணம் கோரி முன் பிணை மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.தமது கட்சிக்காரர், அகதிகள் என்று நம்பியே இலங்கையர்களை வரவழைத்ததாக அவரது சட்டத்தரணி நீதிமன்றில் வாதிட்டார். இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக இலங்கை அகதிகள் இந்தியாவிற்கு வருவது தற்போது சர்வசாதாரணமாக உள்ளது.மேலும் அங்கிருந்து அகதிகளை ஏற்று அவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வழங்குவதில் இந்திய அரசாங்கம் தாராளமாக உள்ளது என்றும் சட்டத்தரணி வாதிட்டார். எனினும்,அபுல்கான், பல்வேறு குற்றங்களை செய்துள்ளார்.…
The post மனித கடத்தலுக்கு உள்ளான இலங்கையர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース