மட்டு. மக்களுக்கான அபிவிருத்தி பணிகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை! சரவணபவன் குற்றச்சாட்டு
4 view
நாட்டில் பொருளாதார நெருக்கடி சூழ்நிலை காணப்பட்டாலும் மட்டக்களப்பு மாநகரசபையில் உள்ள நிதியைக் கொண்டு அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத வகையில் சில அதிகாரிகளின் செயற்பாடுகள் உள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாநகரசபையின் 60வது அமர்வு இன்று காலை மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் ஆரம்பமானது. மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,ஆணையாளர் மதிவண்ணன்,பிரதி ஆணையாளர் சிவராஜா ஆகியோரின் பங்குபற்றுதலுடனும் மாநகரசபை உறுப்பினர்களின் பிரசன்னத்துடனும் இன்றைய சபை அமர்வு வழமையான சம்பிரதாயங்களுடன் ஆரம்பமானது. இதன்போது சபையினை ஆரம்பித்து மாநகரசபை முதல்வர் தலைமையுரையினையாற்றியதை தொடர்ந்து மாநகரசபை உறுப்பினர்கள் சில விடயங்களை சுட்டிக்காட்டியிருந்தனர். குறிப்பாக கடந்த காலத்தில் மட்டக்களப்பில் தகனம் எரிக்கும் இயந்திரம் பொருத்துவதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டிருந்த போதிலும் அதனை நிறைவேற்ற நிர்வாகம் முயற்சி செய்யவில்லையென்றும் தற்போதைய பொறியியலாளர் அது தொடர்பில் அக்கரையற்று செயற்படுவதாகவும் இங்கு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. தொடர்ச்சியாக மக்களின் வாழ்வாதாரம் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் நிதிகள் ஒதுக்கீடுகள் செய்யப்படுகின்றபோதிலும்…
The post மட்டு. மக்களுக்கான அபிவிருத்தி பணிகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை! சரவணபவன் குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மட்டு. மக்களுக்கான அபிவிருத்தி பணிகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை! சரவணபவன் குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
