ரஷ்யாவின் எரிவாயு விநியோகத்தை தடுத்து நிறுத்தியது உக்ரைன்!
4 view
தங்கள் நாட்டு வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு குழாய் மூலம் மேற்கொள்ளப்படும் எரிவாயு விநியோகத்தை தடுத்து நிறுத்தியுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது. ரஷ்யாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எரிபொருளில் 3இல் ஒரு பங்கு, உக்ரைன் வழியாக குழாய் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து 11 வாரங்கள் ஆன நிலையிலும், அந்த நாட்டு வழியாக இதுவரை ரஷ்ய எரிபொருள் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்ய எரிவாயு கொண்டு செல்லப்படும் வழித்தடத்தில் நேற்று (புதன்கிழமை) முதல் தடை ஏற்படுத்தியுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது. இதுகுறித்து உக்ரைனில் எரிவாயு விநியோகத்தை கவனித்து வரும் ஜிடிஎஸ்ஓயு அமைப்பு கூறுகையில், உக்ரைன் வழியாக குழாய் மூலம் அனுப்பப்படும் ரஷ்ய எரிவாயுவை ரஷியப் படையினர் கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் டான்பாஸ் பகுதிகளுக்கு அனுப்பி வருவதாக குற்றம் சாட்டியுள்ளது. எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் எதையும் ஜிடிஎஸ்ஓயு வெளியிடவில்லை. ரஷ்யாவின் இந்தச்…
The post ரஷ்யாவின் எரிவாயு விநியோகத்தை தடுத்து நிறுத்தியது உக்ரைன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரஷ்யாவின் எரிவாயு விநியோகத்தை தடுத்து நிறுத்தியது உக்ரைன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
