அவசரகால சட்டம், துப்பாக்கி பிரயோகத்தை ரத்துச்செய்ய வேண்டும்: சர்வதேச மன்னிப்புச்சபை
4 view
கொழும்பு, மே. 12 இலங்கை அரசாங்கம் பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் அதிகளவு அதிகாரங்களை வழங்கும் அவசரகாலநிலையையும் துப்பாக்கி பிரயோக்தில் ஈடுபடுவதற்கான அதிகாரங்களையும் இரத்துச்செய்யவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.ஆமைதியாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களின் மனித உரிமைகளை கௌரவம் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் மன்னிப்புசபை வேண்டுகோள் விடுத்துள்ளது.அதிகாரிகள் அவசரகால சட்டத்தை பயன்படுத்தி கோட்டா கோ கம போன்ற பகுதிகளில் அமைதியாக ஒன்றுகூடுவதற்கான கருத்தினை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை நசுக்கும் நடவடிக்கைளில் ஈடுபடக்கூடாது எனவும் மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.அமைதியாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீதான தாக்குதல் குறித்து உடனடி சுயாதீன பக்கச்சார்பற்ற வெளிப்படையான பயனளிக்ககூடிய விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான இயக்குநர் யாமினி மிஸ்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.தாக்குதலிற்கு காரணமானவர்களை அதிகாரிகள் நீதியின் முன் நிறுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி வழங்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இந்த தாக்குதலை பார்க்கும்போது அரசாங்கத்திற்கு ஆதரவானவர்கள்…
The post அவசரகால சட்டம், துப்பாக்கி பிரயோகத்தை ரத்துச்செய்ய வேண்டும்: சர்வதேச மன்னிப்புச்சபை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அவசரகால சட்டம், துப்பாக்கி பிரயோகத்தை ரத்துச்செய்ய வேண்டும்: சர்வதேச மன்னிப்புச்சபை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
