சிங்கள, பௌத்த பேரினவாதம் பலவீனமடைந்துள்ளது: தமிழ் மக்கள் தற்போது ஒன்றுபட வேண்டிய காலம்! – கஜேந்திரன் எம்.பி.
4 view
சிங்கள பௌத்த பேரினவாதம் பலவீனம் அடைந்துள்ளது. தமிழ் மக்கள் தற்போது ஒன்றுபட வேண்டிய காலம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். இன்றையதினம் தியாக தீபம் திலீபனின் நினைவு ஆலயத்திற்கு முன்னால் இனப்படுகொலைகளை ஆவணப்படுத்தி காட்சிப்படுத்தலை ஆரம்பித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். கோத்தபாய, மகிந்த அரசானது தமிழ் மக்கள் மீது மாபெரும் இனப்படுகொலையினை அரங்கேற்றியிருந்தது. மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவும், அவரது சகோதரரும் பாதுகாப்புச் செயலராகவும் இருந்து இனப்படுகொலை அன்று அரங்கேற்றப்பட்டது. மாபெரும் மனிதப் படுகொலை நடந்து முடிந்திருக்கிறது. அது உட்பட கடந்த 74 ஆண்டுகளாக தமிழ் மக்கள் மீது சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கமானது இனப்படுகொலையினை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள். இன்றிலிருந்து 18 ஆம் திகதி வரை இனப்படுகொலை வாரம் நடைபெறுகின்றது. இன்று அந்த இனப்படுகொலை வாரம் ஆரம்பிக்கின்றது. 18 ஆம் திகதி இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்காலில் இடம்பெறவுள்ளது.…
The post சிங்கள, பௌத்த பேரினவாதம் பலவீனமடைந்துள்ளது: தமிழ் மக்கள் தற்போது ஒன்றுபட வேண்டிய காலம்! – கஜேந்திரன் எம்.பி. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிங்கள, பௌத்த பேரினவாதம் பலவீனமடைந்துள்ளது: தமிழ் மக்கள் தற்போது ஒன்றுபட வேண்டிய காலம்! – கஜேந்திரன் எம்.பி. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
