‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ பரிமாறுவோம்: வலி சுமந்த கதை பகிர்வோம்! – முள்ளிவாய்க்கால் வாரம் ஆரம்பம்
24 view
வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தினாலும், பொது அமைப்பினராலும், இன்று 8 மாவட்டங்களிலும் “முள்ளிவாய்க்கால் கஞ்சி” தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளது. குறித்த சங்கத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2009, தமிழர் மீது கட்டவிழ்க்கப்பட்ட போரின் இறுதி நாட்கள் அவை. நாற்றிசையும் சூழ்ந்திருந்த இராணுவம் அப்பாவி மக்களின் தலைகளைச் சுட்டுச் சிதறடித்துக்கொண்டிருந்தது. அதுபோதாதென்று ஏவப்பட்ட எறிகணைகள் – கொத்துக்குண்டுகள் மக்களின் மீது கொத்துக்கொத்தாய் வீழ்ந்து வெடித்தன. பிணங்களும், விழுப்புண்ணடைந்தோர் கொதிக்கும் குருதியுமாக முள்ளிவாய்க்கால் எனப்படும் ஈழ அவலநிலம் காட்சிதந்தது. விடுதலையை அவாவிய ஒரு தேசத்தின் மக்களை மரணமும் பசியும் சூழ்ந்திருந்தது. பணத்திற்கு எந்த பெறுமதியும் இருக்கவில்லை, வாங்குவதற்கு எந்த உணவுப்பொருளும் இருக்கவில்லை. இந்நிலையில்தான், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பும் சில தொண்டு நிறுவனங்களும் இணைந்து, வன்னி வன்னி பெருநிலப்பரப்பின் சொந்தக்காரர்களுக்கு அவர்தம் உயிர் பிழைப்புக்கென ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ என்கிற ஜீவாமிர்தத்தை அறிமுகப்படுத்தினர். நீரினுள் சிறிதளவு அரிசியையும் கிடைத்தற்கரிய உப்பையும் இட்டு காய்ச்சி…
The post ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ பரிமாறுவோம்: வலி சுமந்த கதை பகிர்வோம்! – முள்ளிவாய்க்கால் வாரம் ஆரம்பம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ பரிமாறுவோம்: வலி சுமந்த கதை பகிர்வோம்! – முள்ளிவாய்க்கால் வாரம் ஆரம்பம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
