இஸ்ரேலில் பெண் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை
5 view
ஜெருசலேம், மே 12 இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பகைமை நிலவுகிறது. மேற்குகரை பகுதி மற்றும் ஜெருசலேம் நகரம் யாருக்கு சொந்தம் என்பதில் இருநாடுகளுக்கும் இடையில் மோதல் நீடிக்கிறது. கடந்த 1967-ம் ஆண்டு நடைபெற்ற மத்திய கிழக்கு போரில் சர்ச்சைக்குரிய அந்த 2 பகுதிகளையும் இஸ்ரேல் ஆக்கிரமித்தது. ஆனாலும் அந்த பகுதிகளில் இன்னமும் பல லட்சம் பாலஸ்தீனர்கள் வாழ்ந்து வருகின்றனர். இஸ்ரேல் ராணுவ ஆட்சிக்குபட்ட பிராந்தியத்தில் வாழும் இவர்கள் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதே வேளையில் பாலஸ்தீனத்தை சேர்ந்த போராளிகள் பலர் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் பாலஸ்தீன பயங்கரவாதிகளை களையெடுப்பதாக கூறி மேற்குகரை பகுதியில் பாலஸ்தீனர்கள் வாழும் பகுதிகளில் இஸ்ரேல் வீரர்கள் அடிக்கடி அதிரடி தேடுதல் வேட்டையை நடத்துகின்றனர். இதுபோன்ற தேடுதல் வேட்டைகளின்போது அப்பாவி பாலஸ்தீன மக்கள் சுட்டுக்கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில்…
The post இஸ்ரேலில் பெண் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இஸ்ரேலில் பெண் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
