கோட்டா கோ கம, மைனா கோ கம மீதான தாக்குதல்கள் – மஹிந்த, நாமல், பவித்ரா உள்ளிட்ட 20 பேருக்கு எதிராக வழக்கு
10 view
மக்களின் அரசியலமைப்பினால் உறுதி செய்யப்பட்ட உரிமைகளை மீறும் வகையில், கோட்டா கோ கம, மைனா கோகம அமைதி போராட்டத்தில் அத்துமீறி தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அவரது புதல்வர் நாமல் ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன், ரோஹித்த, பவித்ரா, சனத் உள்ளிட்ட 20 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, தன்னையே முறைப்பாட்டாளராக பெயரிட்டு கோட்டை நீதிவான் நீதிமன்றில் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். குற்றவியல் நடைமுறை சட்டக் கோவையின் 136 (1) (அ) அத்தியாயத்தின் கீழ் தனிப்பட்ட மனுவாக அதனை அவர் இவ்வாறு தாக்கல் செய்துள்ளார். குறித்த வழக்கின் பிரகாரம், இவ்வழக்கின் சந்தேக நபர்களாக ஜோன்ஸ்டன் பெர்னாடோ, சமத் நிஷாந்த, சமன்லால் பெர்னான்டோ, மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ,டேன் பிரியசாத், சுதத் ஹேவா பதிரன, சஞ்ஜீவ எதிரிமான, பவித்ரா வன்னியராட்சி, ரோஹித அபேகுணவர்தன (ரத்தரான்), மஹிந்த காந்தகம, லேகா காந்தகம,…
The post கோட்டா கோ கம, மைனா கோ கம மீதான தாக்குதல்கள் – மஹிந்த, நாமல், பவித்ரா உள்ளிட்ட 20 பேருக்கு எதிராக வழக்கு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கோட்டா கோ கம, மைனா கோ கம மீதான தாக்குதல்கள் – மஹிந்த, நாமல், பவித்ரா உள்ளிட்ட 20 பேருக்கு எதிராக வழக்கு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
