இலங்கையின் மொத்த குடும்ப வருமானத்தில் 51.3 வீதத்தை பெறும் செல்வந்தர்கள்!
4 view
இலங்கையின் 20 சதவீத பணக்கார குடும்பங்கள் நாட்டின் மொத்த குடும்ப வருமானத்தில் சுமார் 51.3 சதவீதத்தைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஏழ்மையான 20 சதவீதத்தினர் 2019 இல் 4.6 சதவீதத்தை மட்டுமே பெற்றுள்ளனர் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 2ம் திகதி வெளியிடப்பட்ட ‘2019 குடும்ப வருமானம் மற்றும் செலவினங்கள் (HIES) கணக்கெடுப்பு’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. ‘பணக்கார குடும்பங்கள்’ என வரையறுக்கப்பட்ட குடும்பங்கள், குறைந்தபட்சம் மாதம் 97,591 ரூபா வருமானம் ஈட்டும் அதேவேளை, ஏழ்மையான குடும்பங்கள் மதிப்பாய்வு ஆண்டில் மாதம் 28,057 ரூபாவை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டில் தேசிய மட்டத்தில் இலங்கைக்கான சராசரி குடும்ப வருமானம் 76,414 ரூபா எனவும் சராசரி மாதாந்த குடும்பச் செலவு 63,130 ரூபா எனவும் அது அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறம், கிராமப்புறம் மற்றும் மலையக கிராமம் ஆகிய துறைகளுடன் ஒப்பிடும்…
The post இலங்கையின் மொத்த குடும்ப வருமானத்தில் 51.3 வீதத்தை பெறும் செல்வந்தர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையின் மொத்த குடும்ப வருமானத்தில் 51.3 வீதத்தை பெறும் செல்வந்தர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
