ஜனாதிபதி பதவி விலகவேண்டும்: கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் பெரும்பான்மையோர் வலியுறுத்து

40 view
நாடளவிய ரீதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்று பொதுமக்கள் பாரியளவில் ஆர்ப்பாட்டங்களை செய்து வரும் நிலையில் அவர்களின் வெளிப்பாடுகளுக்கு அமைவாக அவர் பதவி விலகிச் செல்ல வேண்டும் என்று கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பெரும்பான்மையானவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதேநேரம், வாரமொன்றுக்கான பொருளாதார நிலைமைகள் கையாள்வதற்கான நிதி உள்ளமையால் அதன் பின்னர் நிலைமைகள் மேலும் மோசமடையும் என்று ஆளும் தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் பாராளுமன்ற கட்சித்தலைவர்கள் கூட்டம் இன்று மெய்நிகர் வழியில் நடைபெற்றிருந்தது. இதன்போதே மேற்கண்ட விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கூட்டம் தொடர்பில் மேலும் தெரிய வந்துள்ளதாவது, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன கூட்டம் ஆரம்பித்தபோது, அரசாங்கமொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும். அதற்கு அனைத்து தரப்பினரும் முன்வந்து கலந்துரையாடி தீர்மானமொன்றை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அதன் மூலமாகவே நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமைகளை சுமூகமாக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, பொதுஜனபெரமுனவின் சார்பில் பங்கேற்றிருந்த…
The post ஜனாதிபதி பதவி விலகவேண்டும்: கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் பெரும்பான்மையோர் வலியுறுத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース