குழப்ப நிலை நீடித்தால் 12 மணி நேர மின்வெட்டு ஏற்படும்: மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை
14 view
கொழும்பு,மே 11 குறுகிய காலத்துக்கு அரசியல் ஸ்திரத்தன்மையொன்று காணப்படும் என தான் எதிர்பார்த்திருந்ததாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். மத்திய வங்கியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் நாடு தொடர்ந்தும் வீழ்ச்சிப் பாதையிலேயே பயணித்து வருவதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற சம்பவத்தின் காரணமாக ஏற்பட்டிருந்த சிறிய அளவிலான முன்னேற்றமும் இல்லாது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.மேலும், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக அதேபோல அதன் பின்னரானவன்முறைச் சம்பவங்களையும் வன்மையாகக் கண்டிப்பதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் தொடரும் அமைதியின்மை பொருளாதார ஸ்திரத்தன்மையையே ஏற்படுத்தும்.இந்த நிலையில், கூடிய விரைவில் ஏதேனுமொரு முறையில் நிலையான அரசாங்கமொன்றை மக்கள் பிரதிநிதிகள் உருவாக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், நாட்டில் நிலையான…
The post குழப்ப நிலை நீடித்தால் 12 மணி நேர மின்வெட்டு ஏற்படும்: மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குழப்ப நிலை நீடித்தால் 12 மணி நேர மின்வெட்டு ஏற்படும்: மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
