இது மக்களின் காலம் – அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்! செந்தில்வேல் எடுத்துரைப்பு
13 view
தற்போது எல்லா மக்களும் சேர்ந்து செயற்படும் காலம் வந்துள்ளது என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி. க. செந்தில்வேல் தெரிவித்துள்ளார். யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது நிலைமைகள் மாறியுள்ளன. ஏற்கனவே இப்படி அரசாங்கத்திற்கு எதிராக பல சம்பவங்கள் நடந்திருக்கிறது. அதனை ஒப்பிட்டு நோக்கும் போது இது பாரியளவில் சம்பவங்கள் ஏற்படுமென்பது தெரியவருகிறது. நாம் இவ்வாறு நடைபெறும் என முன்னரே எதிர்பார்த்தோம். இதுபற்றி மக்களுக்கும் அறிவூட்டி வந்துள்ளோம். இப்போது எல்லா மக்களும் சேர்ந்து செயற்படும் காலம் வந்ததாக நாம் நினைக்கின்றோம். எல்லா இன, மொழி மக்களும் இணைந்து ஜனநாயக ஆட்சி, ஒரு நல்ல ஆட்சியை உருவாக்க முன்செல்ல வேண்டும். புதிய அரசியலமைப்பு ஒன்று எழுத்தப்பட வேண்டும் . அந்த புதிய அரசியலமைப்பு மக்களை பிரதிபலிக்கவேண்டும். இது பாராளுமன்றத்தில் உள்ளவர்களின் பொறுப்பு அல்ல. அவர்கள்…
The post இது மக்களின் காலம் – அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்! செந்தில்வேல் எடுத்துரைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இது மக்களின் காலம் – அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்! செந்தில்வேல் எடுத்துரைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
