இனமுறுகலை தூண்டிவிட்டு, இழப்புக்களை சந்தித்தபின் பதவி ராஜினாமா செய்வது முட்டாள்தனம்! – செல்வம் எம்.பி
4 view
மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி ஆகியோர் காலம் கடந்து முடிவுகள் எடுப்பது தவறு. மக்கள் விரும்பவில்லை என்றால் அவர்கள் தமது பதவிகளை விட்டுச் செல்ல வேண்டும் என்பதே காலத்தின் நீதி. பிரச்சினைகளை ஏற்படுத்தி இன முறுகலை தூண்டி விட்டு இழப்புக்களை சந்தித்த பின்பு தமது பதவிகளை ராஜினாமா செய்வது என்பது முட்டாள்தனம் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். மன்னாரில் வைத்து இன்று அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு மிகவும் கொந்தளிப்பான நிலையில் இருந்து கொண்டு இருக்கின்றது. சிங்கள தேசத்தில் போராட்ட வடிவில் பல விடயங்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றது. மஹிந்த ராஜபக்ஷவின் ஆரம்ப பிரச்சினையே இன்று பாரியளவில் வெடித்துள்ளது. பொருளாதார பிரச்சனை பின்தங்கிய நிலையிலே இவ்வாறான ஒரு சூழலை உருவாக்கி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் அவருடைய அரசாங்கம் மிக மோசமான ஒரு சூழலை உருவாக்கி உள்ளது…
The post இனமுறுகலை தூண்டிவிட்டு, இழப்புக்களை சந்தித்தபின் பதவி ராஜினாமா செய்வது முட்டாள்தனம்! – செல்வம் எம்.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இனமுறுகலை தூண்டிவிட்டு, இழப்புக்களை சந்தித்தபின் பதவி ராஜினாமா செய்வது முட்டாள்தனம்! – செல்வம் எம்.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
