அலரிமாளிகை சம்பவத்துடன் தொடர்புடையவர்களை அடுத்த சில மணித்தியாலங்களில் கைது செய்ய வேண்டும் – சாலிய பீரிஸ்

4 view
அலரிமாளிகை சம்பவத்துடன் தொடர்புடையவர்களை அடுத்த சில மணித்தியாலங்களில் கைது செய்ய வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருமான சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்வாறான கைதுகள் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் எனவும் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கக்கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். சிலர் வெளிநாடு செல்ல முயற்சிக்கின்றனர் என்றும் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லப் போகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, அவர்கள் மீது குறிப்பாக அலரிமாளிகை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கூறிய அவர், அவர்களை நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்காதீர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
The post அலரிமாளிகை சம்பவத்துடன் தொடர்புடையவர்களை அடுத்த சில மணித்தியாலங்களில் கைது செய்ய வேண்டும் – சாலிய பீரிஸ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース