துரிதமாக மீளெழுச்சி கண்ட ‘கோட்டா கோ கம’ போராட்டக்களம்
27 view
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களால் அடித்து நொறுக்கப்பட்ட போராட்டக்களம் மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உடனடியாக பதவி விலக வேண்டும் என அங்கு கூடியுள்ள மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் அத்துமீறி நுழைந்து நாசப்படுத்திய தமது அறவழிப் போராட்டக்களமான கோட்டாகோகமவை மீள ஸ்தாபித்த மக்கள், ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் என மீண்டும் ஒருமித்து கோஷம் எழுப்பிய வண்ணமுள்ளனர். போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்று 31 நாட்களாகின்றன. குண்டர்கள் அடித்து நொறுக்கிய தற்காலிக கூடாரங்கள் உள்ளிட்ட போராட்டக்களத்தை இளைஞர், யுவதிகளும் பொதுமக்களும் ஒன்றிணைந்து மீள ஸ்தாபித்துள்ளனர். அங்கிருந்த சிதைவுகள் அகற்றப்பட்டு, போராட்டக்களம் இன்று காலை மீண்டும் சுத்தப்படுத்தப்பட்டது. தடயவியல் பொலிஸ் அதிகாரிகள் இன்று போராட்டக்களத்திற்கு சென்றிருந்தனர். பொலிஸாருக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கி இளைஞர், யுவதிகள் விசாரணைக்கு உதவினர். இதேவேளை, இலங்கை ஜனநாயக ஆட்சி அமைப்பில் கெளரவமான இடமாகக் கருதப்படும் அலரி மாளிகை, நேற்று…
The post துரிதமாக மீளெழுச்சி கண்ட ‘கோட்டா கோ கம’ போராட்டக்களம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post துரிதமாக மீளெழுச்சி கண்ட ‘கோட்டா கோ கம’ போராட்டக்களம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
