மஹிந்தவின் தவறால் பேரவாவி நந்திக்கடலாக மாறியுள்ளது! – சம்பிக்க குற்றச்சாட்டு
5 view
பிரதமர் மஹிந்த ராஜபக்ச அமைதியான முறையில், கௌரவமாக பதவி விலகி இருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. தவறான வழியை தேர்ந்தெடுத்துவிட்டார். அதன் விளைவாகவே பேரவாவி, நந்திக்கடலாக மாறியது என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், 43 ஆம் படையணியின் ஸ்தாபகத் தலைவருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். நாட்டில் நேற்று ஏற்பட்ட சம்பவத்துக்கு மஹிந்த ராஜபக்சவே பொறுப்புக்கூற வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார். அமைதிவழியில் தீர்த்துக்கொள்ளக்கூடியதாக இருந்த பிரச்சினையை, தனது திமிர்தனத்தால் வன்முறைமூலம் தீர்க்க மஹிந்த ராஜபக்ச முற்பட்டதாலேயே, நாட்டில் இன்று சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மஹிந்த ராஜபக்சவுக்கு அரசியல் அனுபவம் இருப்பதால், பேர்டினண்ட் மார்கோஸ்போல அமைதியாக வெளியேறுமாறு நான் கோரியிருந்தேன். அவ்வாறு இல்லாமால் கடாபிபோல் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டால், இறுதியில் அந்த வன்முறைப்பொறிக்குள்ளேயே சிக்க நேரிடும் எனவும் சுட்டிக்காட்டிருந்தேன். இவ்விவகாரத்தில் மஹிந்த ராஜபக்ச மதிநுட்பத்துடன் செயற்படவில்லை. தவறான வழியையே தேர்வு செய்திருந்தார். அதன் விளைவாகவே பேரவாவி,…
The post மஹிந்தவின் தவறால் பேரவாவி நந்திக்கடலாக மாறியுள்ளது! – சம்பிக்க குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மஹிந்தவின் தவறால் பேரவாவி நந்திக்கடலாக மாறியுள்ளது! – சம்பிக்க குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
