வீரசிங்க எம்.பியின் வீடும் மக்களால் முற்றுகையிடப்பட்டு எரிப்பு
14 view
அம்பாறை தமண பொலிஸ் பிரிவிலுள்ள கல்கந்த பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யு.டி வீரசிங்கவின் வீடும் மக்களால் எரிக்கப்பட்டுள்ளது. இலங்கை பூராகவும் இடம்பெற்று வருகின்ற போராட்டத்தில் அம்பாறை மாவட்டத்தில் நேற்று திங்கட்கிழமை (9) இரவு குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் வீடு மக்களினால் எரிக்கப்பட்டுள்ளது. இப்பாராளுமன்ற உறுப்பினர் பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி இணைத்தலைவரில் ஒருவருமானவார். இதே வேளை திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் பொதுஜன பெரமுன கட்சியின் சார்பாக விமலவீர திசாநாயக்கவும் டாக்டர் திலக் ராஜபக்சவும் பாராளுமன்ற உறுப்பினராக டபிள்யு.டி வீரசிங்கவுடன் மக்களால் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். 2020 பாராளுமன்றத் தேர்தலில், திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் சிறி லங்கா பொதுஜன பெரமுன – 1 லட்சத்து 26ஆயிரத்து 012 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதே வேளை அக்கரைப்பற்றில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேனாவின் வீட்டுக்கு முன்னால் ரயர் தீயிட்டு எரிப்பு சம்பவம் நேற்று திங்கட்கிழமை (9) இரவு…
The post வீரசிங்க எம்.பியின் வீடும் மக்களால் முற்றுகையிடப்பட்டு எரிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வீரசிங்க எம்.பியின் வீடும் மக்களால் முற்றுகையிடப்பட்டு எரிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
