58 சிறைக்கைதிகள் காணாமல்போயுள்ளதாக சிறைச்சாலை தலைமையகம் தெரிவிப்பு

13 view
வட்டரக்க, மே 10 வட்டரக்க சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்ட 58 சிறைக்கைதிகள் காணாமல்போயுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். கைதிகளுக்கான புனர்வாழ்வு திட்டத்தின் ஒரு அங்கமாக இடம்பெறும் வெளிப்புற கட்டுமானப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த குறித்த கைதிகள், மீண்டும் வட்டரக்க சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்டனர். அதன்போது, குறித்த கைதிகள் பயணித்த பேருந்துகள் மீது, ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், அதனையடுத்து, 58 கைதிகள் காணாமல்போயுள்ளதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இந்த கைதிகள் தொடர்பான தகவல்களை தெரிந்திருப்பின், சிறைச்சாலை தலைமையகத்துக்கோ அல்லது அருகில் உள்ள காவல்நிலையத்துக்கோ தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் சிறைச்சாலை தலைமையகம் கோரியுள்ளது.
The post 58 சிறைக்கைதிகள் காணாமல்போயுள்ளதாக சிறைச்சாலை தலைமையகம் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース