சிறைக்கைதிகளை வன்முறைக்கு பயன்படுத்தினாரா மஹிந்த? அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி
7 view
சிறைகைதிகளையும், கிராமிய ஏழைகளையும் ஒன்றுதிரட்டி பிரதமரின் வாசஸ்தலத்தினை அரச பயங்கரவாதத்தின் குகையாக்கி அவர்களால் நடாத்த முன்னெடுக்கப்பட்ட வன்முறை மொட்டுக் கட்சியினரதும், அவர்களின் தலைமையினதும் கொடூர முகத்தை காட்டி நிற்பதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அலரி மாளிகைக்கு முன்னாலும் காலிமுகத்திடலிலும் நடத்தப்படும் ஜனநாயக ரீதியான போராட்டத்தினை மொட்டு கட்சியினர் திட்டமிட்டு சிதைத்தழிக்க கிராமிய ஏழைகளையும், சிறை கைதிகளையும் ஒன்றுதிரட்டி வந்து பிரதரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தினை, அரச பயங்கரவாதத்தின் குகையாக்கி, அவர்களால் நடாத்த முன்னெடுக்கப்பட்ட வன்முறை மொட்டுக் கட்சியினரதும் அவர்களின் தலைமையினதும் கொடூர முகத்தையும், தொடர்ந்து இடம்பெற்றுள்ள வன்முறையினையும் வன்முறைக்கு பதில் வன்முறையல்ல என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றது. ஜனநாயக ரீதியிலான போராட்டத்திற்கு ஆதரவாக செயல்பட்ட பொதுமக்களும் ஈற்றில் வன்முறையை கையில் எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இத்தகைய நிலைக்கு…
The post சிறைக்கைதிகளை வன்முறைக்கு பயன்படுத்தினாரா மஹிந்த? அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிறைக்கைதிகளை வன்முறைக்கு பயன்படுத்தினாரா மஹிந்த? அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
