காலிமுகத்திடலில் போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டமைக்கு அரச ஆசிரியர்களின் சங்கம் கண்டனம்!
14 view
முறையற்ற அரசாங்கத்துக்கு எதிராக காலிமுகத்திடலில் அமைதியான முறையில் இடம்பெற்று வந்த போரட்டத்தினை முன்னெடுத்த போராட்டக்காரர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தினை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம். என இலங்கை அரச ஆசிரியர்களின் சங்கத்தின் கிழக்கு மாகாண செயலாளர் கோபாலசிங்கம் சுஜிகரன் தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு அனுப்பிவைக் கட்ட அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடுகையில், 30 நாட்களாக இடம்பெற்றுவந்த போரட்டத்தினை குழப்பும் வகையில் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவான குண்டர்களால் அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்த போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டமை குறித்து இலங்கை அரச ஆசிரியர்களின் சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது. ஆட்சியிலுள்ள அரசாங்கத்தின் ஒழுங்கற்ற ஆட்சியால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் அரசுக்கு எதிராக மிகவும் அமைதியான முறையிலேயே இந்த போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். எனினும் இவர்களின் குரலுக்கு அரசாங்கம் செவிசாய்க்காத நிலையில் மேற்படி கீழ்த்தரமான தாக்குதல் காரணமாக மக்கள் இன்று ஆத்திரமடைந்து நாடு முழுவதும் அமைதியற்ற சூழல் உருவாகியுள்ளது. பொதுமக்கள் ஒருவரை ஒருவர் தாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.…
The post காலிமுகத்திடலில் போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டமைக்கு அரச ஆசிரியர்களின் சங்கம் கண்டனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காலிமுகத்திடலில் போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டமைக்கு அரச ஆசிரியர்களின் சங்கம் கண்டனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
