காலிமுகத்திடல் தாக்குதல் – தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அரச பயங்கரவாதத்தை நினைவுபடுத்துகின்றன! விக்னேஸ்வரன் எம்.பி
15 view
காலிமுகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய அப்பாவி மக்கள் மீது குண்டர்களை ஏவி தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு அரசாங்கமே முழு பொறுப்பையும் ஏற்கவேண்டும் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்ததாவது, ‘அரசாங்கத்துக்கு சார்பாக அலரி மாளிகையில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் காலிமுகத்திடலில் கடந்த 30 நாட்களாக போராட்டம் நடத்திய அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தமிழ் மக்கள் மீது கடந்த 65 வருடங்களாக மாறி, மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் மேற்கொண்ட அரச பயங்கரவாதத்தை நினைவுபடுத்துகின்றன. தமது உரிமைகளுக்கு எதிராக சாத்வீக வழியில் போராட்டம் மேற்கொண்ட தமிழ் மக்கள் மீது படையினரை ஏவி தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருந்தன. இதுவே பின்னர் ஆயுத போராட்டத்துக்கு தமிழ் மக்களை தள்ளியது. அதேபோல, உணவு, எரிபொருள், மருந்துப்பொருட்கள் ஆகியவற்றுக்கான தமது உரிமைகளை வலியுறுத்தி அமைதியான வழியில்…
The post காலிமுகத்திடல் தாக்குதல் – தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அரச பயங்கரவாதத்தை நினைவுபடுத்துகின்றன! விக்னேஸ்வரன் எம்.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காலிமுகத்திடல் தாக்குதல் – தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அரச பயங்கரவாதத்தை நினைவுபடுத்துகின்றன! விக்னேஸ்வரன் எம்.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
