…
13 view
காத்தான்குடியில் முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல்— ((கனகராசா சரவணன்) காத்தான்குடியில் முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் வீட்டின் மீது இன்று (09) திங்கட்கிழமை மாலை கல் வீச்சு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.காத்தான்குடி 3ம் குறிச்சி ஊர்வீதியிலுள்ள முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் வீட்டின் மீது சம்பவதினமான இன்று மாலை மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த போது இந்த கல் வீச்சு சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்த தாக்குதலினால் வீட்டின் முற்பகுதியிலுள்ள ஜன்னல் கண்ணாடியொன்று உடைந்து சேதமடைந்துள்ளது. இதனையடுத்து அங்கு பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர். Post navigation
The post … appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post … appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
