இலவச சுகாதார சேவை கடுமையாக வலுவிழந்து விட்டது! யாழ். போதனா வைத்தியசாலை
4 view
இலவச சுகாதார சேவை கடுமையாக வலுவிழந்து விட்டது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ் போதனா வைத்தியசாலைக்கிளை தெரிவித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ் போதனா வைத்தியசாலைக்கிளை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில், வடக்குமாகாண வைத்தியர்களும், தாதியர்களும் மற்றும் சக மருத்துவப் பணியாளர்களும், நிர்வாகப் பணியாளர்களும் இங்கு இன்று ஒரே நோக்கத்திற்காக ஒன்று கூடி இருக்கின்றோம். தங்களது சுயலாப நோக்கங்களுக்காகவும் அதீத சொகுசு வாழ்க்கைக்காகவும் இந்த நாட்டு மக்களின் வாழ்வினை சீரழித்து பாரிய மோசடிகளில் ஈடுபடும் அரசியல்வாதிகளை சிறைக்குத் தள்ளி சுபீட்சமான இலங்கையினை கட்டியெழுப்புவதே இங்கு கூடியுள்ள எங்களின் நோக்கமாகும். சகிக்க முடியாத மோசடிகளால் இந்த நாட்டு மக்களின் அடிப்படை தேவைகளான உணவு, கல்வி சுகாதாரம் என்பவற்றை எட்டாக்கனியாக்கி மக்களை தெருவில் அலையவிட்டு, தங்களின் கதிரைகளை இறுக பற்றி கொள்வதற்காக அவசரகாலச் சட்டத்தினை அரசாங்கம் பொருத்தமற்ற நேரத்தில் அமுல்படுத்தியுள்ளது. ஊழல் மோசடிகளின் மூலம் தங்களது…
The post இலவச சுகாதார சேவை கடுமையாக வலுவிழந்து விட்டது! யாழ். போதனா வைத்தியசாலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலவச சுகாதார சேவை கடுமையாக வலுவிழந்து விட்டது! யாழ். போதனா வைத்தியசாலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
