ஒற்றை வேட்பாளர் போட்டியிட்ட விசித்திர தேர்தலில் ஹாங்காங்கின் புதிய தலைவராக ஜான் லீ தேர்வு
39 view
ஹாங்காங், மே 09 ஹாங்காங்கின் புதிய தலைவராக ஜான் லீ தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தேர்தலில் போட்டியிட்ட ஒற்றை நபர் அவர்தான். ஹாங்காங், இங்கிலாந்தின் காலனியாக இயங்கி வந்தது. ஆனால் 1997-ம் ஆண்டு சீனாவிடம் ஹாங்காங்கை இங்கிலாந்து ஒப்படைத்தது. அது முதற்கொண்டு ஹாங்காங், சீனாவின் இரு சிறப்பு நிர்வாக பகுதிகளில் ஒன்றாக திகழ்கிறது. மற்றொன்று மக்காவ். ஹாங்காங்கை சீனாவிடம் இங்கிலாந்து ஒப்படைத்தபோது விதிக்கப்பட்ட முக்கிய நிபந்தனை, அங்கு சுந்திரம் இருக்க வேண்டும், பேச்சு சுதந்திரம் போன்ற உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பதாகும். ஆனால் அந்த உத்தரவாதம் இப்போது எழுத்து அளவில்தான் உள்ளது, ஹாங்காங் மக்களுக்கு கருத்து சுதந்திரம் இல்லை, கடுமையான சட்டங்களை சீனா அமல்படுத்தி உள்ளது. சீனா தேர்தல் என்ற பெயரில் ஒன்றை நடத்தி, தலைவரை (தலைமை நிர்வாகி) அறிவித்து, அவரைக் கொண்டு ஆட்சி செய்து வருகிறது. அங்கு 2017-ம் ஆண்டு முதல் தலைவர் பதவியில் கேரி லாம் இருந்து வந்தார்.…
The post ஒற்றை வேட்பாளர் போட்டியிட்ட விசித்திர தேர்தலில் ஹாங்காங்கின் புதிய தலைவராக ஜான் லீ தேர்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒற்றை வேட்பாளர் போட்டியிட்ட விசித்திர தேர்தலில் ஹாங்காங்கின் புதிய தலைவராக ஜான் லீ தேர்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
