கடுவலை நீதிவான் இல்லத்தில் பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் பணி இடைநிறுத்தம்
4 view
கடுவலை நீதவான் சனிமா விஜேபண்டாரவின் இல்லத்திற்கு பாதுகாப்பு வழங்க நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், அவரது பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. கடமை தவறிய குற்றச்சாட்டின் பேரில் அவர் குறித்த பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. நீதிபதிகளின் பாதுகாப்பு விடயங்களில் உரிய நேரத்தில் மற்றும் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள 6 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடுவலை நீதவான் மற்றும் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து நீதிபதிகளின் பாதுகாப்பை உடனடியாக அதிகரிக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று பணிப்புரை விடுத்தார். கடுவலை நீதவானின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தின் பாதுகாப்பு நீக்கம் தொடர்பில் நீதித்துறை சேவை சங்கம் மற்றும் நீதிக்கான சட்டத்தரணிகள் சங்கம் இணைந்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றதை அடுத்து இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. கடுவலை நீதவான் சனிமா விஜேபண்டாரவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு நீக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிற்கு இலங்கை நீதிச் சேவை சங்கம் அதிருப்தி…
The post கடுவலை நீதிவான் இல்லத்தில் பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் பணி இடைநிறுத்தம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடுவலை நீதிவான் இல்லத்தில் பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் பணி இடைநிறுத்தம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
