போராட்டங்களுக்குள் வன்முறைகள் ஏற்படுத்தப்படும் பேராபத்தான நிலை! – சுமந்திரன் அச்சம்
38 view
அவசரமாக, அவசரகால நிலைமை அமுலாக்கப்பட்டுள்ளமையால், முன்னெடுக்கப்பட்டு வரும் வெகுஜனப் போராட்டங்களுக்குள் வன்முறைகள் ஏற்படுத்தப்படும் பேராபத்தான நிலைமை தற்போது உருவாக்கியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அச்சம் வெளியிட்டுள்ளார். அதேநேரம், இதுவரையிலும் அமைதிவழியில் போராடியவர்கள் அதனை தொடர்ந்தும் பின்பற்றவேண்டும் என்றும் வலியுறுத்தியதோடு, ஜனநாயக நிறுவனங்களை சிதைக்கும் வகையில் செயற்பட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். அமுலாக்கப்பட்டுள்ள அவசரகால நிலைமை தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், பொருளாதார நெருக்கடிகள் காரணமாக முன்னெடுக்கப்பட்டு வரும் வெகுஜனப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இவ்வாறானதொரு சூழலில் அவசரமாக ஜனாதிபதி கோட்டாபயவினால் அவசரகால நிலைமை அமுலாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயற்பாடானது உள்நோக்கம் கொண்டதாக கொள்ளவேண்டியுள்ளது. குறிப்பாக, பாராளுமன்றக் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்ட தருணத்தில் அவசரகால நிலை அமுலாக்கப்பட்டிருப்பதானது, ஜனாநாயக ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களுக்குள் வன்முறைகளை உருவாக்கும் பேராபத்தையும் கொண்டிருக்கின்றது. ஆகவே போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மிக கவனமாக நடந்து கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் எவ்வாறு வன்முறைகளுக்கும், திசைதிருப்பல்களுக்கும் இடமளிக்காது பாராட்டத்தக்க…
The post போராட்டங்களுக்குள் வன்முறைகள் ஏற்படுத்தப்படும் பேராபத்தான நிலை! – சுமந்திரன் அச்சம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போராட்டங்களுக்குள் வன்முறைகள் ஏற்படுத்தப்படும் பேராபத்தான நிலை! – சுமந்திரன் அச்சம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
