மக்களுக்கு எதிரியாக இருக்க விரும்பவில்லை: இராஜினாமா தொடர்பில் சியம்பலாப்பிட்டிய உருக்கம்
7 view
எனக்கு இரண்டாவது தடவையாக பிரதி சபாநாயகர் பதவி வழங்கப்பட்டதன் பின்னர் மக்கள் என்னை எதிரியாக கருதுகின்றனர். பொது மக்களுக்கு எதிரியாக நான் விரும்பவில்லை. இதன் காரணமாக பதவியை இராஜினாமா செய்துவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு அனுப்பி வைத்துள்ள இராஜினாமா கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்கள் அரசாங்கத்தில் வகித்த பதவிகளிலிருந்து விலகி எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்தனர். இதன் ஒரு நிலைப்பாடாக நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் பதவி சுயாதீனமானது என்ற போதிலும், ஆளுங்கட்சியின் ஆதரவுடன் நான் மீண்டும் தெரிவு செய்யப்பட்டமையால் அதன் தார்மீக உரிமை சம்பந்தமான கேள்விகளுடன் எனது பதவியை மீண்டும் இராஜினாமா செய்கின்றேன். இருப்பினும் புதிய சபாநாயகர் தெரிவின் போது எமது கட்சி மற்றும் ஏனைய கட்சிகள் மீண்டும் என்னை பிரதி சபாநாயகராக தெரிவு செய்தமையால் பிளவுகளுக்கு வித்திட்டுள்ளதாக…
The post மக்களுக்கு எதிரியாக இருக்க விரும்பவில்லை: இராஜினாமா தொடர்பில் சியம்பலாப்பிட்டிய உருக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மக்களுக்கு எதிரியாக இருக்க விரும்பவில்லை: இராஜினாமா தொடர்பில் சியம்பலாப்பிட்டிய உருக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
